இசை நிகழ்ச்சியில் மோதல் – பலர் காயம் ஒருவர் பலி!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் 20 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

குடிபோதையில் இருந்த நபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அதனை கட்டுப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் உந்துருளியை செலுத்தியுள்ள நிலையில், உந்துருளி, பாரவூர்தியொன்றில் மோதி அவர் பலியாகியுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.