15 ஆம் திகதி அரச விடுமுறை !

எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தை அரச விடுமுறை தினமாக அறிவிக்குமாறு உள்ளாட்டு விவகாரங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அமைச்சரவைக்கு வழங்கிய யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இந்நிலையில் இம் முறை சித்திரைப்புத்தாண்டு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதனால் ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை நாளாக வழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.