முல்லைத்தீவு – முத்தையன் கட்டு பகுதியில் இன்று அகழ்வு பணி!

முல்லைத்தீவு – முத்தையன் கட்டு பகுதியில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு இடது கரை சந்திப்பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணிப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ வைப்பத்தின் தங்கநகைகள் புதைத்த வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது.

எனினும் குறித்த அகழ்வு பணிகளின் போது இதுவரை தமிழீழ வைப்பத்தின் தங்கநகைகள் எதுவும் மீட்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.