உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது!

உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராது என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முதலில் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. ஆகவே சர்வதேச விசாரணை அவசியம். குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர்.

அதற்கு முதலில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைக்கு பன்னாட்டு பொறிமுறைகள் உள்ளடக்கப்படவேண்டியது அவசியம். அதையே கூட்டமைப்பும் வலியுறுத்துகிறது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.