அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது!

அரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையை காரணம் காட்டி அரச அதிகாரிகளுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து நியாமற்றது.

அத்துடன் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டால் அந்த துறைக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தினதும் குறித்த அமைச்சினதும் பொறுப்பாகும்.

எனினும் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க முடியாது எனக் கூறுவது அரசாங்கத்தின் இயலாமையையும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்படும் ஒற்றுமையின்மையையும் வெளிப்படுத்துகின்றது’ என தெரிவித்துள்ளது.