துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட புகைப்பட கலைஞர்!

பொரலஸ்கமுவ பகுதியில் ஒரு புகைப்பட கலைஞர் ஒருவரின் வாகனம் மீது தாக்குதல் நடாத்தியதோடு ஆயுதமுனையில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த புகைப்பட கலைஞரான உபுல் டி சொய்சா மேலும் தெரிவிக்கையில் நேற்றைய தினம் மாலை சுமார் 6 மணியளவில் போரரசஸ்ரூவ சந்தியில் தான் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவேளையில் தனது வாகனத்தை இடைமறித்த சிலர் வாகனத்தை சேதப்படுத்தியதோடு துப்பாக்கி காட்டி தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.