தமிழ் மொழி தொடர்பிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

இலங்கையில் தற்போது நடைமுறை ரீதியில் தமிழ் மொழியின் ஆதிக்கம் மிகவும் குறைவாக இருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் அரச கருமமொழிகள், இந்து சமய விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கம் குறித்த குழு நிலை விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்த நிலையை மாற்றுவதற்கு கடந்த மூன்று வருடங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

இதேவேளை அரச நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் மொழி பிரச்சினைகள் நிலவுகின்றன அவற்றை தீர்ப்பதற்கான விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அரச நிறுவனங்களுக்கு தேவையான பெயர்ப்பலகைகளை மொழிப்பிழை இன்றி வடிவமைத்து வழங்குவதற்கான மத்திய நிலையம் ஒன்றையும் தமது அமைச்சு உருவாக்கவுள்ளது.

இதன்படி ஸ்ரீ லங்கா வன் என்ற மும்மொழிகளிலுமான எழுத்துரு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.