கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானிய போர்க்கப்பல்!

பிரித்தானிய கடற்படையினருக்கு சொந்தமான HMS Montrose போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளதுடன், இரு நாட்டு கடற்படை அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, 133 மீட்டர் நீளமுடைய HMS Montrose போர்க்கப்பலானது இன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து திரும்பிச்செலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கி இருக்கும் இந்த காலப்பகுதியில் இருநாட்டு கடற்படை வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.