கரைச்சியில் அரசாங்க அதிபரின் விசேட நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி!

கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள பரந்தன் சிவபுரம் பாடசாலை அருகாமையிலான வீதி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நிரந்தர வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் இருந்து விசேடமாக பெறப்பட்ட 5.35 மில்லியன் ரூபாய் செலவில் சுமார் 600m நீளமான வீதி நிரந்தர வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இப் பகுதியில் நீண்ட காலமாக பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்டமையினால் சிவபுர மக்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இப்பொழுது வீதி புனரமைக்கப்படுவதுடன் ஏனைய வீதிகள் தற்காலிக புனரமைப்புக்கு உட்படுத்தப்படும் மேலும் வீதி வேலைகள் கண்காணிப்பதற்காக சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் பரந்தன், வட்டார உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா ஆகியோர் சென்றனர்.