திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும் இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரண்டிச் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக, திமுத் கருணாரத்னவுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.