மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை!

பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் என்றபவரே இன்று (புதன்கிழமை) அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அவருடன் பொறுப்பேற்கப்பட்ட லங்கா சஜித் பெரேராவிடம் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மொஹமட் சித்திக் மொஹமட் சியாம் விடுவிக்கப்பட்ட போது, அதனை பதிவு செய்யச்சென்ற ஊடகவியலாளரொருவரை சியாமின் உதவியாளர்கள் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.