இனந்தெரியாதவர்களினால் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை!

நவகமுவ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவலை கொத்தலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இனந்தெரியாதவர்கள் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த இரண்டு பேர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி ஊழியர்களை அச்சுறுத்தி 30,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில்,பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.