நாய் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய கொடூரன்.

பிறந்து சில தினங்களேயான நாய்க் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை மாதாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 30). இவர் தன் வீட்டிற்கு அருகேயுள்ள காணியில் சுற்றித்திரிந்த பிறந்து சில தினங்களேயான நாய்குட்டிளுடன் உடலுறவு கொண்டுள்ளார்.

இந்த கொடூரமான சம்பவம் அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் 14ஆம் திகதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்கரன் இதுபோன்ற காரியங்களில் ஈடுபவடுவது இது முதல் முறையல்ல எனவும், இதற்கு முன்பாகவும் இதேபோன்று செய்துள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் சாய் விக்னேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த பகுதியின், காலனி இரண்டாம் தெருவில் இருந்த நாய் குட்டிகளையும் பாஸ்கரன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகதாகவும், அச்சமயத்தில் அவரை அடித்து எச்சரித்ததாவும், தற்போது அவர் மீண்டும் அதே காரியத்தை செய்துள்ளதாகவும் சாய் விக்னேஷ் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, CCTV காட்சிகளின் அடிப்படையில் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.