பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் நாடாளுமன்ற வீதியில் செல்ல முற்பட்டபோது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற முயற்சித்ததைத் தொடர்ந்து, அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2019 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் தற்போது நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.