கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில்  தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டை, 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள கட்டடம் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.