ஐ.நா.பேரவை குரைக்குமே தவிர கடிக்காது!

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்குமே தவிர கடிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே சர்வதேச நீதிமன்றத்தை அமையுங்கள் என வலியுறுத்துவதைக் கண்டு அரசாங்கம் அஞ்சவேண்டிய தேவையில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல் தமிழர் தரப்பின் அச்சுறுத்தலைக் கண்டும் அஞ்சிவிட வேண்டாம் எனவும், சர்வதேச நீதிமன்றத்தை அமைக்கக்கோரும் தமிழர் தரப்பின் கோரிக்கை இறுதிவரை கனவாகவே அமையும் எனவும் அவர் மேலும் கூறினார்.