உலகில் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம்!

உலகில் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம்!

உலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது.

த லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கூறியிருப்பதாவது,

“உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன.

விதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது.

மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.

ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.

சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.

உணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது.

கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.