தமிழ் மக்களின் ஆதரவுடன் விரைவில் ஆட்சி மாற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஆதரவுடன் மீண்டும் எனது தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் தேவைகளை அறிந்து அபிவிருத்திகளை முன்னெடுத்தது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உணரப்பட்டது.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.

எதிர்க்கட்சி பதவியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டனர் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.