வீதிகளில் இப்படியா இலங்கை பொலிஸ்?

நம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது. சுய பாதுகாப்பு என்பது அனைத்து பொது மக்களும் நன்கு அறிந்திருக்க வேண்டிய ஒன்று.

எமது பயண நேரத்திலும் சரி அல்லது வீடுகளில் இருக்கும் பொழுதும் நம்மை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

துவிச்சக்கர வண்டிகள் போன்றவற்றில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவது இன்றியமையாதது, ஆனால் பொதுமக்களுக்கு இவ்வாறான அறிவுரைகளை வழங்க வேண்டிய பொலிஸாரே இவற்றை கடைப்பிடிக்காமல் இருப்பது கவலைக்குரியது.

இலங்கை பொலிஸார் தலைக்கவசம் அணியாமல் பாதுகாப்பின்றி பயணிப்பது கடும் கண்டனத்திற்குரிய விடயமாகும்.

வீதி விதி முறைகளை மதித்து, அவைகளை பின்பற்ற வேண்டிய பொலிஸாரே தலைக்கவசம் அணியாது வீதியில் சட்ட விதிகளை மதிக்காமல் பயணிப்பது அனைவரையும் கோபத்திற்குள்ளாக்கக் கூடியதாகும்.

சட்டம் என்பது அனைவரும் கடைபிடிக்க வேண்டியது. மக்கள் மாத்திரம் கடைபிடிக்க வேண்டியதல்ல.

சட்டத்தை கடைப்பிடித்து, மக்களை கடைபிடிக்க வைக்க வேண்டிய பொலிஸாரே சட்டத்தை கடைபிடிக்காமல் செயற்படுவது மக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

தலைக்கவசம் அணியாமை, அரச வாகனங்களை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்துதல், நடைபாதையில் பொலிஸ் வாகனங்களை நிறுத்துதல், வாகன இலக்க தட்டுகளில் தெளிவின்மை ஆகியவற்றை பொலிஸாரே செய்கின்றனர்.

இப்படியான நிலை தொடரலாமா? பாதுகாப்பை பற்றி மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பொலிஸாரே விதிகளை கடைபிடிக்காமல் செயற்படுவது தட்டிக் கேட்கப்பட வேண்டியதொன்றாகும்.

நாங்கள் செய்தால் தவறு, பொலிஸார் செய்தால் சரியா? என மக்கள் வினவுகின்றனர்.

மக்கள் பொறுமையை கடைபிடிக்காமல் கேள்வி கேட்க வேண்டும். இந்த நிலை தொடர விடக் கூடாது. பொலிஸாருக்கு எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.