மன்னிப்புக் கோரினால் திரும்பப்பெறுவோம்!

கையெழுத்தை போலியான முறையில் பதிவு செய்து ஊடகங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில் திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோருவதாயின், வழக்கை குறுகிய வழிமுறையின் மூலம் முடித்துக் கொள்ள ஜனாதிபதி-பிரதமர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையெழுத்தை போலியான முறையில் பதிவு செய்து ஊடகங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதற்கு தினம் ஒன்றை அறிவிக்குமாறு மனுதாரர்களினால் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோருவதாயின், வழக்கை குறுகிய வழிமுறையின் மூலம் முடித்துக் கொள்ள ஜனாதிபதி-பிரதமர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

அவர் மன்னிப்புக்கோரினால், வழக்கை நிபந்தனைகள் ஏதும் இன்றி குறுக்கு வழிமுறையின் மூலம் முடித்துக் கொள்வதற்கு ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் தமது உடன்பாட்டை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ் வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.