நாளை முதல் 15ம் திகதி வரை…! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரிய உச்சம் கொடுக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கோடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என அந்த திணைக்களம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களிலும் வவுனியா, அநுராதப்புரம் மாவட்டங்களிலும் நாளைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வெப்பமான காலப்பகுதியில், தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.