திமுகவினருக்கு மகிந்த கொடுத்த விலை உயர்ந்த பரிசு!

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் எம். தியாகராஜனை ஆதரித்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“2009ம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போது இந்த இருகட்சிகளுமே அதிகாரத்தில் இருந்தன. ஆனால் இலங்கை தமிழ் மக்களை பாதுகாக்க எதுவும் செய்யவில்லை.

இலங்கை தமிழர் படுகொலை விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரே பொறுப்பாளிகள். திமுக உறுப்பினர்கள் ஐந்து பேர் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த பரிசில்களை வழங்கியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.