மன்னார் ஆயரை சந்தித்தார் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மனித புதைக்குழி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், மாணவர்களின் கல்வி வளர்சிக்கான உதவிகள், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.