ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவர் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.