டிசம்பரில் ஐ.தே.க தனித்து ஆட்சியமைக்கும்!

டிசம்பரில் தனித்து அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த இறுதிநாள் விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறு உருவாக்கப்படும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.