யாழில் இருந்து வந்த பேருந்தின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பயணிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.