ஓய்வுபெறும் பிரதம நீதியரசருக்கு பிரியாவிடை

பிரதம நீதியரசர் நலின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

இந்நிலையில் ஓய்வுபெறவுள்ள அவருக்கு பிரியாவிடை அளிக்கும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.

கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிரதம நீதியரசராக நலின் பெரேரா ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவினால் அரசியலமைப்பு சபையின் தீர்மானத்துக்கு அமைய நியமிக்கப்பட்டார்.

பிரதம நீதியரசராக பதவியேற்ற பின்னர் நலின் பெரேரா பல முக்கிய தீர்ப்புக்களை வழங்கியிருந்தார்.

அதில் கடந்த ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.