கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசா இன்றி கனடா செல்ல முயற்சித்தவர்களே நேற்று கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கனகபுரம் பிரதேசத்தில் உள்ள வீட்டினை சுற்றிவளைக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கெள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.