தரமற்ற பொலித்தீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை.

சுமார் 10 டொன் அளவிலான தரமற்ற பொலித்தீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொம்பே பிரதேசத்தில் வைத்து குறித்த பொலித்தீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாத்தளை, கம்பஹா மற்றும் பாணந்துறை முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது தரமற்ற பொலித்தீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தப் பொலித்தீன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.