வீதியில் வீசப்பட்ட இரண்டு மாத சிசு!

மாத்தளை – கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் நேற்று அதிகாலை இந்த சிசு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிசு மீட்கப்பட்டு, மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.