உறவுச்சோலை மறுவாழ்வு கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மங்கள விளகேற்றலுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான புத்தகப்பை என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் என்பனவும் இடம்பெற்றது.

நிகழ்வில் உறவுச்சோலை மறுவாழ்வு கழகத்தின் பணியாளர்கள், பயனாளிகள், மதகுருமார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.