மைத்திரியின் தலைமைக்கு எதிராக சுதந்திரக்கட்சிக்குள் போர் கொடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்திற்கு எதிராக போராட்டம் உருவாகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள அணியினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் ராஜபக்சவினருக்கு பெற்றுக்கொடுக்கும் இணக்கப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல் செயற்பட்டு வருவதாகவும் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டாம் என ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்ததுடன் எனினும் அதனை ஏற்காது சிலர் செயற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.பி. திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, டி.பி.ஏக்கநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, லக்ஷ்மன் வசந்த பெரேரா,அனுராத ஜயரத்ன, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரே ஜனாதிபதியின் ஆலோசனையை ஏற்காது செயற்பட்டு வருவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.