பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை(04) அன்று பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பின்லாந்து நாட்டில் வசித்து வரும் குறித்த சிறுவன் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி குடும்பமாக வாகனத்தில் சென்றபோது விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூளைச்சாவு அடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்று அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியரின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் இறப்பிற்கு ஈழத்தில் உள்ள செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், பின்லாந்தில் உள்ள அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம், பின்லாந்து தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்கள் சார்பாக இரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.