இராஜாங்க அமைச்சர் பதவிகளுக்காக 6 பேரின் பெயர்கள் பரிந்துரை!

இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டிய 6 பேரின் பெயர்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

19ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி, பிரதமருடன் கலந்தாலோசித்து இந்த நியமனங்களை வழங்க முடியும்.

எனினும் இன்னும் இது தொடர்பில் ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரங்கே பண்டார, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம்.பௌசி, லக்ஷ்மன் செனவிரட்ன, காமினி விஜித் விஜியமுனி சொய்ஸா மற்றும் பியசேன கமகே ஆகியோரின் பெயர்களே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைகளின் படி ரங்கே பண்டார வடிகாலமைப்பிற்கும், பொன்சேகா உள்துறை விவகாரத்திற்கும் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.