தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை கற்பிக்கின்றார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை மக்கள் மத்தியில் கற்பிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சோனியா காந்தி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் நாட்டின் பன்முகத்தன்மையை யாரெல்லாம் ஆதரிக்கவில்லையோ அவர்கள்தான் தேசப்பற்றாளர்களென மோடி கூறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை இந்தியாவின் அடித்தளமாக திகழக்கூடிய அம்சங்களையெல்லாம் தகர்த்தெறிவதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றதெனவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைந்து ஆட்சியை கைப்பற்றினால், தங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.