8 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு முருகண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவரை, யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.