பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 10 பேர் கைது!

பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றொரு களியாட்ட நிகழ்வு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் ஹொட்டல் ஒன்றின் உரிமையாளர், பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இளம் பெண்கள் 5 பேரும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு அவர்கள் தங்காலை, எஹெலியகொட, றகம, கெகிராவா, நவகமுவ, மீரகம, மாத்தறை மற்றும் கிரிருல்ல பகுதிகளை சேந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

மேலும் கைது செய்தவர்களை தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.