கதிர்காமத்தில் தவமிருக்கும் பிரபல அரசியல்வாதி! பதவி ஆசை நிறைவேறுமா?

அண்மைக்காலமாக இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி பதவி மீதான ஆசை தீவிரமடைந்துள்ளது.

விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் கதிர்காமம் கோவிலில் தவமிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதான கட்சியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர், கதிர்காமம் கோயிலுக்கு சென்று பூஜை ஒன்றை நடத்தியதோடு நேர்த்தி கடன் ஒன்றையும் வைத்துள்ளார்.

கோயிலிலுள்ள விக்கிரங்களுக்கு அருகில் முழங்காலிட்டபடி குறித்த அரசியல்வாதி நீண்ட நேரமாக தனது வேண்டுதலை முன்வைத்துள்ளார்.

குறித்த அரசியல்வாதி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.