மின்வெட்டு முடிவுக்கு வருகின்றது!

நாட்டில் தினந்தோறும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டுக்கு எதிர்வரும் புதன்கிழமையுடன் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில், தினமும் மின்வெட்டை அமுல்படுத்துகின்றமையால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரவி கருணாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மின்னுற்பத்தி முறையில் சிறந்த முகாமைத்துவம் இல்லாதமை காரணமாகவே சுழற்சி முறையில் மின் வெட்டினை அமுல்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமையுடன் மின்வெட்டு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுமென ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தமிழ்- சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் கொண்டாட்டங்களின் மின்சார தேவைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தேவையான மின்சார வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திகொடுக்க மாற்று வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.