நீரில் மூழ்கி பலியான இரு சகோதரிகள் – கொலை செய்யப்பட்டார்களா?

குருணாகலில் இரு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அளவ்வ பகுதியை சேர்ந்த 14 மற்றும் 11 வயதுடைய இனோகா சச்சினி மற்றும் திரோஷா ஜீமேஷிகா என்ற சிறுமிகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலகும்புர சங்கிலி பாலத்திற்கு அருகிலுள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த இரு சிறுமிகளும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்செயலாக எதுவும் நடந்ததா? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.