மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின் கப்பல்!

மின்சார நெருக்கடியை தீர்க்க மிதக்கும் மின்சார கப்பல் வருகின்றது, இது புதிய விடயம் அல்ல.

ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் மின் துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என மின்வலு, எரிசக்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் எக்காரணம் கொண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை அடுத்து நாட்டில் சகல பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.