கொழும்பில் 18வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி!

கொழும்பு, காலி முகத்திடலிலுள்ள ஹோட்டலின் 18வது மாடியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

18 மாடியில் பணி செய்து கொண்டிருந்நத இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹோட்டலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீகஹதென்ன, ஊரல லியனகே திஸால் குணசிங்க என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.