நாடாளுமன்றத்தில் கதவுகளை பழுது பார்ப்பதற்காக 60 கோடி!

நாடாளுமன்றத்தில் கதவுகளை பழுது பார்ப்பதற்காக 60 கோடி ரூபாய் பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளியேறும் கதவுகள் இரண்டினை பழுது பார்க்கும் நோக்கில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மாதிவெல உறுப்பினரின் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கதவுகளை பழுது பார்க்கும் மதிப்பீட்டிற்கமைய 20 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் ஜயந்திரவில் இருந்து கொண்டுவரப்பட்ட மதிப்பீட்டிற்கமைய 40 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இறுதியாக 60 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.