வெள்ளரிப்பழத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வெள்ளரிப்பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளரிப்பழம் தற்போது 150 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு உட்பட பல பகுதிகளில் இளநீர் 60 ரூபாய் தொடக்கம் 100 ரூபாவில் விற்பனை செய்யப்படுகின்றது.