கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி படைப்பிரிவினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் குறித்த சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது கிறிஸ் மரம் ஏறுதல், தலையணை சண்டை, பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் பலவும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.

இதேவேளை படையினரின் தற்காப்பு கலை கண்சாட்சியும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.