நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பிரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர், யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்கு அருகில் கடற்படையினரால் இன்று (09) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள இம்மீனவர்கள் காங்கேசந்துறைமுகக் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.