கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 9-4-2019 இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிராம சக்தி செயற்திட்ட யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு ஷிரால் லக்திலக ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , பிரதேச செயலாளர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

மீளாய்வு கலந்துரையாடலின் போது 2017 ஆம் ஆண்டின் கிராம சேவையாளர் ரீதியாக மூன்று வேலைதிட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோர் கிராம சக்தி செயற்திட்டத்தின் வகிபங்கு, மக்களின் ஒன்றிணைவு, எதிர்கால செயற்பாடுகள், மேம்படுத்தல் நடவடிக்கைகள் குறித்தும் அனுபவரீதியிலாக பெற்றுகொண்டிருந்த கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.