காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு!

காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்தாக களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஒன்றினைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கலாவதியான மருந்துகள் விற்பனைக்காக கட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதன் போதே மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதற்கமைவாக காலாவதியான மருந்துப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யவுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்களை அழிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெயர் மாற்றப்பட்ட அடையாளங்கள் ஒட்டப்பட்ட குளிர்பான வகைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டு அதனையும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.