யாழில் பேருந்து பணிப்புறக்கணிப்பு இல்லை.

நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

எனினும் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சேவைப் புறக்கணிப்புக்கு அழைப்புவிடவில்லை என யாழ். மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் சாரத்தியம் உள்ளிட்ட சில போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவரைவுக்கு எதிராக நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் 24 மணிநேரம் இந்தச் சேவைப் புறக்கணிப்பு இடம்பெறும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு மக்களின் நலன்கருதி தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறும் என்று யாழ்.மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.