அம்பாந்தோட்டையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து சீனா ஆய்வு!

அம்பாந்தோட்டையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து சீனாவிலிருந்து வருகைத்தந்த குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்றே இந்த விடயம் குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது.

அதற்கமைய சீன முதலீட்டாளர்கள் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) அம்பாந்தோட்டை மாநகரசபையின் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்போதே, அங்குள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அதற்கான தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல்களை கட்டும் முதலீட்டாளர்களும் பங்கேற்றதாக அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துடுத்து, சீன முதலீட்டாளர்கள் குழு தமது முதலீடுகளுக்குப் பொருத்தமான நிலங்கள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.